நிறைமாத கர்ப்பிணி ஒருவர் குடும்பத் தகராறுகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி ஒரு வருசம் கூட ஆகலை..! கர்ப்பிணி வேறு..! இப்டி பண்ணிட்டாளே..! கதறிய உறவுகள்! செங்கல்பட்டு சோகம்!
சென்னை புறநகரான செங்கல்பட்டில் மறைமலைநகர் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் இளவரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு 1 வருடத்திற்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சமீபகாலமாக கணவன் மனைவியிடையே கடுமையான தகராறுகள் ஏற்பட்டு வந்த வண்ணமிருந்தன. இதனிடையே கலைச்செல்வி கருவுற்றார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சமையல் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது கலைச்செல்வி மிகவும் மனமுடைந்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்த கலைச்செல்வி, தன்னுடைய அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கலைச்செல்வி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்ட இளவரசன் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக மறைமலை நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலைச்செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மகளின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி கலைச்செல்வியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இந்த சம்பவமானது மறைமலைநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.