தோள் மீது 1 குழந்தை..! இடுப்பில் இன்னொரு குழந்தை..! பிறந்து 14 நாட்கள் ஆன சிசு..! 500 கிமீ நடையாய் நடந்த தாய்..! மனதை உலுக்கும் காரணம்!

இடுப்பிலும் தோளிலும் குழந்தைகளை சுமந்து 7 மாத கர்ப்பிணி ஒருவர் 560 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ள சம்பவமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் நவி மும்பை நகரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது சொந்த ஊருக்கு செல்வதற்காக அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் இந்த ரயில்களில் சமூக இடைவெளியை கருத்தில்கொண்டு மிகவும் குறைவானவர்களே செல்கின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களில் ஒருவரான இளம்பெண் 7 மாத கர்ப்பமாக உள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு சிறு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் வயிற்றில் ஒரு பிள்ளையையும், தோளில் 2 பிள்ளைகளையும் சுமந்துகொண்டு அந்த இளம்பெண் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு செல்வதற்கு நடைபயணத்தை தொடர்ந்துள்ளார்.

நேற்று இரவு 7 மணிக்கு இந்தப் பெண் நடக்கத் தொடங்கியுள்ளார். அதன்படி காலை 7 மணி வரை தொடர்ந்து இந்தப் பெண் நடந்துள்ளார். வழியிலுள்ள சிறு சிறு கடைகளில் பசியாற்றி தன்னுடைய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு குழந்தையை தலையில் சுமந்து, மற்றொரு குழந்தையை தோளில் சுமந்து 7 மாத கர்ப்பிணி நடப்பது என்பது சுலபமான காரியம் அல்ல.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் எந்தவித தொழிலையும் செய்ய இயலவில்லை. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளோம். மேலும், உணவின்றி எவ்வளவு நாட்கள்தான் தொழில் செய்யும் இடத்தில் தங்கியிருப்பது. அதனால்தான் மிகுந்த சிரமப்பட்டு என்னுடைய சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறேன். நிச்சயமாக என்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிடுவேன்" என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.