சட்டமன்றத்துக்கு இந்த நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று ஸ்டாலின் கருதுகிறார். ஆகவே, 2026 சட்டசபை தேர்தலுக்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோரை நியமிக்க தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இதற்காக, டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த பிரஷாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து பேசி, ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படுகிறது.
மீண்டும் பிரசாந்த் கிஷோர் வந்தாச்சு… குஷியில் தி.மு.க. உடன்பிறப்புகள்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார். வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஐபேக் நிறுவனம் முன்னின்று செய்தது. தி.மு.க., மட்டும், 135 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சியினரும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர்.
ஒரு நாளைக்கு, 1 கோடி என 360 கோடி ரூபாய் ஐபேக் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பின் கிளம்பியது. அதன்பிறகு இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஸ்டாலின் மருமகன் சபரீசனின் சகோதரி நிறுவனமான, 'பென்' ஈடுபட்டது.
ஆனால், சட்டமன்றத்துக்கு இந்த நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று ஸ்டாலின் கருதுகிறார். ஆகவே, 2026 சட்டசபை தேர்தலுக்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோரை நியமிக்க தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இதற்காக, டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த பிரஷாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து பேசி, ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படுகிறது.
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே இருக்கும் நிலையில், கட்டாய வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோரின் வியூக வகுப்பு தி.மு.க.,வுக்கு தேவைப்படுகிறது. அதற்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோர் அழைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த முறை எத்தனை கோடிகள் என்பது இன்னமும் வெளியாகவில்லை.