ரேப் பண்ணனும்! குரூப் செக்ஸ்! பாய்ஸ் லாக்கர் ரூம் ரகசியம்! பெற்றோர்களை பதற வைக்கும் நிகழ்வு!

டெல்லியில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் பயின்று வரும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற குழுவை உருவாக்கி தங்களுடன் படிக்கும் சக மாணவிகளை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என வக்கிரமான தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சின்ன குழந்தை முதல் வயதான பாட்டி வரை உள்ள அனைத்து தரப்பு மக்களையும் காம கொடூரர்கள் விட்டு வைப்பதில்லை. பள்ளி மாணவர்களுக்கும் இம்மாதிரியான சிந்தனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள் ஒன்றிணைந்து இன்ஸ்டாகிராமில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற குழுவை அமைத்து உள்ளனர். இந்த குழுவில் பல மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களுடன் படிக்கும் சக மாணவிகளை பற்றி ஆபாச கமெண்ட்களை பதிவிட்டு வந்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த மாணவிகளை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படங்களை எடுத்து அதனை ஆபாச இணையதளத்தில் இருக்கும் வேறு ஒரு புகைப்படத்துடன் மார்ஃபிங் செய்து நிர்வாண புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தங்களுடைய காம பசியை தீர்த்து இருக்கின்றனர். பின்னர் தங்களுடைய இச்சை தீரும் அளவிற்கு மோசமான கமெண்ட்களையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். அந்தக் குழுவில் இருக்கும் ஏதாவது ஒரு மாணவன் ஒரு மாணவியை பற்றி தவறாக கமெண்ட் அடித்தால் உடனே அதற்கு மற்ற மாணவர்களும் தங்களுடைய கருத்தை கமெண்ட்டுகளாக பதிவு செய்வதை தங்களுடைய வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனுடைய உச்சகட்டமாக ஒருநாள் மாணவர் ஒருவர் அளித்த கமெண்டை பார்த்து மற்றொருவன் இந்த பெண்ணை நாம் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தால் எப்படி இருக்கும் என்று தன்னுடைய காம பசியை தீர்த்துக் கொள்வதற்காக கமெண்ட் அடித்திருக்கிறார். இதனைப் பார்த்து அந்த குழுவில் இருந்த மற்ற மாணவர்கள் நான் ரெடி .. நீங்கள் ரெடியா? என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த மாணவர்கள் தங்களுடைய குழுவில் பேசிக்கொண்டிருந்த இந்த செய்தியானது ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த மாணவர்களுக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் பல பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த மாணவர்களுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். 

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் இந்த மாணவர்களை பற்றி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நோட்டீசும் அனுப்பி இருந்தார். இதனால் சூடு பிடிக்கத் தொடங்கிய இந்த சமாச்சாரம் டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் இதைப்பற்றி டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் இந்த குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஐபி ஆகியவற்றை அளிக்குமாறு கூறியுள்ளனர். தற்போது போலீசார் அந்த மாணவர்கள் யார் என்றும் அவர்கள் எங்கிருந்து இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டார்கள் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில்தான் டெல்லியில் இளம் பெண் ஒருவரை ஓடும் பேருந்தில் கற்பழித்து கொலை செய்த காம கொடூரர்களை தூக்கிலிட்டு மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பரபரப்பு குறைவதற்கு உள்ளேயே இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கால சந்ததியருக்கு கல்வி மட்டுமல்லாமல் ஒழுக்க நெறிகளையும் கற்றுத் தரவேண்டும் என்பதை இது நிரூபித்து காட்டியிருக்கிறது.