பலாப்பழம்..! அணில் கடித்த கொய்யா..! ஊரடங்கிலும் வீட்டு மொட்டை மாடியில் உஷ்ணத்தை ஏற்றிய 25 வயது ஷான் ரோமி..! யார் தெரியுமா?

பிரபல மலையாள நடிகை ஷான் ஊரடங்கு காலத்தில் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார்.


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர் நடிகைகளும் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வீடுகளிலேயே இருக்கும் நடிகர்-நடிகைகள் தங்களுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பலவித வீடியோக்களையும் புகைப்படங்களையும் தங்களுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவதை தங்களுடைய வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷான் தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானுடன் இணைந்து கம்பட்டிபாதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. மாடலிங் துறையில் பணியாற்றிய ஷான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே கழித்து வரும் நடிகை ஷான் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி வருகிறது. வெள்ளை நிற பிகினி உடையில் , உடல் அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு பழங்களோடு இணைந்து தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் அழகாக போஸ் அளித்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் இந்த நடிகையின் வீட்டு மொட்டை மாடியிலேயே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படங்களை நடிகை ஷான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். நடிகை ஷான் கடைசியாக நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.