மாடல் அழகியும் ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளருமான நடிகை மெபினா மைக்கேல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென குறுக்கே வந்த டிராக்டர்..! மோதிய வேகத்தில் சிதைந்த கார்! துடிதுடித்து உயிரிழந்த டிவி பெண் பிரபலம்!

பிரபல கன்னட தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பியாதே ஹுடுகிர் ஹாலி லைஃப் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வெற்றி பெற்றவர் நடிகை மற்றும் மாடல் அழகியான மெபினா மைக்கேல். இவருக்கு வயது 22. இவர் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற இதன் மூலமாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதன் மூலம் பிரபலமடைந்த இவரிடம் சில திரைப்படங்களில் நடிப்பதற்கு கூட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை மெபினா, தன்னுடைய தோழிகளுடன் இணைந்து கூர்க் அருகேயுள்ள மடிக்கேரி இந்த இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். தேவிஹிள்ளி அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த பொழுது வளைவு பகுதியில் எதிர்பாராமல் வந்த டிராக்டரின் மீது வேகமாக கார் மோதியது. இதனால் இவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
விபத்தில் சிக்கிய அனைவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மெபினா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த செய்தியானது அவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.