49 வயதில் 6 வயசு சின்ன பையனுடன் நான்காவது கல்யாணம்! கலக்கும் கவர்ச்சி நடிகை!

பேஸ்பால் வீரர் அலெக்ஸ் ரோட்ரிக்ஸை ஜெனிஃபர் லோபஸ் திருமணம் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ் (49). இவர், இதுவரை 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். இது தவிர, நடிகர் பென் அஃபெலக் உடன் செக்ஸ் உறவும் வைத்து வந்தார். ஆனால், அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஜெனிஃபர் லோபஸ்க்கு, தற்போது 11 வயதுள்ள இரட்டை மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில், தன்னைவிட 6 வயது இளையவரான பேஸ்பால் விளையாட்டு வீரர் ரோட்ரிக்ஸ் (43) உடன் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிஃபர் நெருங்கி பழகி வருகிறார். இதுபற்றிய தகவல்களை இருவருமே மறுத்து பேசவில்லை. ஏற்கனவே திருமணமாகி, 2 மகள்களை பெற்ற ரோட்ரிக்ஸ், தற்போது விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருகிறார்.

ஊக்கமருந்து பயன்படுத்திய காரணத்தால், பேஸ்பால் விளையாட்டில் இருந்து அவர் 2014ம் ஆண்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, மனம் உடைந்து காணப்பட்ட ரோட்ரிக்ஸ், ஜெனிஃபர் லோபஸ் உடனான பழக்கத்தை நெருக்கமாக மாற்றிக் கொண்டார்.

ஆண்டுக்கணக்கில் பழகிவந்த இருவரும், தற்போது திருமணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ளனர். இதற்கு அடையாளமாக திருமண நிச்சயதார்த்த மோதிரம் மாற்றும் புகைப்படத்தை ஜெனிஃபர் லோபஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில், திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.