விக்கிரவாண்டி தோல்வி! பொன்முடியை கூப்பிட்டுத் வசைபாடினாரா ஸ்டாலின்..? அறிவாலயத்தில் நடந்தது என்ன?

விக்கிரவாண்டியில் எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்றுதான் ஸ்டாலின் நினைத்தார். அதற்காகத்தான் முதலில் பொன்முடியை இறக்கினார். அவர் மட்டும் போதாது என்று ஜெகத் ரட்சகனையும் இறக்கினார்.


அதன்பிறகு வன்னியர்களுக்கு ஏராளமாக செய்யப்போவதாக என்னென்னமோ வாக்குறுதிகளை அள்ளியள்ளிக் கொடுத்தார் ஸ்டாலின். ஆனால், அத்தனையையும் சி.வி.சண்முகமும் ராமதாஸும் சேர்ந்து அடித்து நொறுக்கிவிட்டனர்.

தோல்வி என்பது பரவாயில்லை, ஆனால் இத்தனை வித்தியாசமா என்று நொந்து போனராம் ஸ்டாலின். அந்த தோல்விக்குக் காரணம் சொல்வதற்காக பொன்முடியும் வேட்பாளரும் இன்று ஸ்டாலினை சந்தித்தார்கள்.

உள்ளே என்ன பேசினார்கள் என்று கேட்டோம். ‘‘பணம் மட்டும்தான் காரணம்’’ என்று பொன்முடி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டாராம் ஸ்டாலின். இனிமே யாரைத் திட்டி என்ன ஆகப்போகுது. உள்கட்சித் தேர்தல் வருது, வன்னியர்களை உங்க பகுதிக்குப் போடுங்க என்று சொல்லி அனுப்பினாராம்.

திட்டு விழப்போகிறது என்று நினைத்த பொன்முடியும் வேட்பாளரும் ஜாலியாக சிரித்தபடி வெளியே வந்தார்கள். அதெப்படிப்பா, ஜெயிலுக்குப் போனாலும், தோத்துட்டு வந்தாலும் ஜாலியா சிரிக்கிறீங்க? தி.மு.க.காரங்களுக்கு தெம்பு ஜாஸ்திதான்.