ஆபாச வீடியோ விவகாரம்! பொள்ளாச்சி ஜெயராமன் மகன் திடீர் தலைமறைவு!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் தனது நண்பர்களுடன் காரில் அதிவேகமாக செல்லும்போது சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான வழக்கில் உடன் பயணம் செய்த பெண் பலியானார்.


 இந்த வழக்கு விசாரனை திருப்பூர் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு பிரவீன் ஆஜராகததால் வழக்கு விசாரனை அடுத்த மாதம் 15 ம் தேதிக்கு ஒத்திவைப்பு. இவர் மீது 304A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்கள் ஆபாச வீடியோ விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பெயரும் அடிபடுகிறது. இந்த நிலையில் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் தேவையில்லாத சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும் என்று கருதியே பொள்ளாச்சி ஜெயராமன் என் மகன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் இந்த விவகாரம் வெளியே வந்ததிலிருந்தே பொள்ளாச்சி ஜெயராமன் என் மகன் எங்கும் செல்லாமல் ரகசிய இடத்திலேயே தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனை தொடர்புபடுத்தி டிடிவி தினகரன் சில கருத்துகளை கூறி இருந்தார். மேலும் மாநில மகளிர் ஆணைய நிர்வாகிகளும் தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமன் மகனை விசாரிக்கவும் தயார் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில்தான் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.