பொள்ளாச்சியில் அடுத்தடுத்து நிறுத்தப்படும் அப்பாவி பெண்களின் திருமணம்! ஆபாச வீடியோ வெளியானதால் விபரீதம்!

பொள்ளாச்சி கும்பலால் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது தகவலால் பொள்ளாச்சி பகுதியில் பெண்களை எடுக்க பலரும் தயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொள்ளாச்சி திருநாவுக்கரசு சபரிராஜன் உள்ளிட்ட கும்பலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது. அவர்கள் சுமார் 1050 வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி வந்ததாகவும் தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் பலர் தான் அந்த ஆபாச கும்பலிடம் சிக்கினார் என்கிற தகவல் வெளியானதால் பொள்ளாச்சியில் பெண்களை அனைவருமே சந்தேகக் கண்ணோடு கண்ணோட்டத்தோடு பார்க்கும் ஒரு நிலை இருக்கிறது. இதனால் பொள்ளாச்சியில் பெண்களை நிச்சயம் செய்த பலரும் தங்கள் மகனுக்கோ தங்கள் சகோதரருக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க வேண்டுமா என்று யோசிப்பதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி வருகிறது.

இதையெல்லாம் விட உச்சகட்டமாக மூன்று பெண்களின் திருமணத்தை மாப்பிள்ளை வீட்டார் நிறுத்தி வைத்து விட்டனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் அந்தப் பெண்களும் பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பலிடம் சிக்கி இருக்கலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் கருதுவதுதான் என்றும் சொல்கிறார்கள். 

ஆனால் எந்தப் பெண்ணின் திருமணம் நின்றது என்கிற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. போலீசார் விரைந்து செயல்பட்டு இந்த வழக்கில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற விவரத்தை தோராயமாக வெளியிட்டால் மட்டுமே இதுபோன்ற வதந்திகள் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.