துப்பாக்கி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த சகோதரிகள்! அதிர வைக்கும் காரணம்!

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த சகோதரிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தமிழீழம் என்பவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது சகோதரி ஓவியாவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.தாங்கள் இருவரும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி அதிகாரிகளிடம் அவர்கள் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி வீடியோ சம்பவத்தை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக மாணவிகள் இருவரும் கூறியுள்ளனர். எனவே தங்களை பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி வைத்துக் கொள்ள தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

மாணவிகள் கொடுத்துள்ள மனு குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். துப்பாக்கி கேட்டு மாணவிகள் கொடுத்த மனுவால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.