நீ தாண்டா பொன்னுங்கள கூட்டிட்டு போன! சபரிராஜனை ஜெயிலுக்குள் வைத்து வெளுத்த பொள்ளாச்சி கும்பல்!

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் குறைகூறும் நிகழ்வுகள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளன.


கடந்த சில மாதங்களாக தமிழகத்தையே புரட்டிப்போட்ட சம்பவங்களில் பொள்ளாச்சி பாலியல் குற்றமும் ஒன்றாகும். பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் என பல நூற்றுக்கணக்கான மாணவர்களை அழைத்து சென்று அவர்களின் கற்பை சூறையாடிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வெளியே வந்தது.

இந்த சம்பவங்களில் சில பெரிய அரசியல் தலைகளும் சிக்கி கொண்டனர். பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் இந்த வழக்கில்  தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாயின. தமிழக அரசு கூலிப்படையை அமைத்து குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தது. திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை சிபிசிஐடி ஆய்வாளர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் கோயம்புத்தூர் சிறைச்சாலையில் இருந்து கன்னியாகுமரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் சம்பவங்கள் சிறையில் நிகழ்ந்துள்ளதாக முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது குண்டர் சட்டம் பாய்ந்ததால் அனைவரும் சிறையில் வருந்தி கொண்டிருந்ததாகவும், அப்போது அவர்களுக்கிடையே நிறைய வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளனவாகவும் கூறப்படுகின்றது. 

வாக்கு வாதங்கள் எல்லாம் முற்றிப்போய் 4 தேர் ஒன்று சேர்ந்துகொண்டு சபரிராஜனை அடித்துள்ளனர். "நீ தான் பெண்களை எல்லாம் கூட்டி வந்து அவர்களை கற்பழித்தாய். ஆதலால் நீதிபதியின் முன் எல்லாவற்றுக்கும் நான் தான் காரணம் என்று ஒப்புக்கொள்" என்று கூறி சபரிராஜனை கொடுமை படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவமானது வழக்கில் ஏதேனும் புதிய பாதைகளை வழிவகுக்குமா என்று சிபிசிஐடி ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.