ஷர்மினி ஆனந்தவேலை கொலை செய்தது யார்? 20 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்கப்படவில்லை என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


1999-ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டு போர் கடுமையாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த ஷர்மினி ஆனந்தவேல் குடும்பத்தினர் கனடா நாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். தன்னுடைய பெற்றோர் மற்றும் இரு சகோதரர்களுடன் டான் மில்ஸ் என்ற இடத்தில் ஷர்மினி வசித்து வந்துள்ளார்.

ஜூன் மாதம் 1999-ஆம் ஆண்டில் ஷர்மினியின் வயது 15. உனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் வடக்கு டொரண்டோ மாத காலத்திற்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. காவல்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு தேடியும் 4 மாதங்களுக்குப் பிறகு அவருடைய எலும்புகள் மட்டுமே கிடைத்தன.

சம்பவம் நடந்து 20 ஆண்டுகளான பிறகும் இப்போது வரை காவல்துறையினரால் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் 23 வயதான இளைஞரை சந்தேக குற்றவாளியாக காவல்துறையினர் கைது செய்து வைத்துள்ளனர்.

சம்பவத்தன்று காலை 10:30 மணியளவில் ஷர்மினி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஷர்மினியை பார்த்ததாக பல்வேறு சாட்சியங்களை காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

மேலும் அவருக்கு வேலை வழங்கியதாக கூறப்படும் "மெட்ரோ சர்ச் யூனிட்" போலியானது என்பதையும் காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்தனர். காவல்துறையினர் ஷர்மினி குடியிருந்த குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது இளைஞன் மீது தங்கள் கவனத்தை திருப்பினர்.

இளைஞனிடமும் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. எனினும் 20 ஆண்டுகள் கழித்தும் குற்றவாளிகளை உறுதியாக காவல்துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை என்பது வியப்பை தருகிறது.