3 பிள்ளைங்க இருக்கு..! 1000 ரூபாய் எப்படி பத்தும்? அதான் இதை விக்கிறேன்..! இளம் பெண்ணின் வைரல் வீடியோ உள்ளே!

தன்னை மிரட்டிய காவல்துறையினருக்கு இளம்பெண் தக்க பதிலடி கொடுத்துள்ள சம்பவமானது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஊரடங்கு காலத்தில் பலவிடங்களில் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு நண்பர்களாக பழகியுள்ளனர். இருப்பினும் சில நேரங்களில் அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் மக்களிடையே ஆட்சேபிக்கும் முறையில் நடந்து கொள்வதும் நிகழ்ந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் அரசு அதிகாரி ஒருவர் தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வந்த பழத்தை கீழே தள்ளும் காட்சிகளை அனைவரும் கண்டோம். இதுபோன்ற சில சம்பவங்கள் அரசு அதிகாரிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

தற்போது கேனில் டீ விற்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது காவல்துறையினருக்கும் டீ விற்ற இளம்பெண்ணுக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இளம்பெண் காவல்துறையினருக்கு தக்க பதிலடி கொடுத்தது மட்டுமின்றி தன்னுடைய வண்டி நம்பரையும் வெளிப்படையாக கூறிவிட்டு  அங்கிருந்து புறப்பட்ட காட்சிகள் நம்மை மிரள வைக்கின்றன.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.