எதையெல்லாமோ காட்டினான்‌‌..! நாங்கள் மயங்கினோம்..! நாகர்கோவில் காசியால் சீரழிந்த பெண்கள் பகீர் வாக்குமூலம்!

பெண்களை ஏமாற்றி வந்த காசியிடம் காவல்துறை துணை ஆய்வாளரின் மகள் சிக்கியிருப்பது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டிங்காகி இருப்பவர் காசி.இவர் சமூக வலைத்தளங்களில் பல பெண்களிடம் தன்னை பாடி பில்டர் என்றும், பணக்காரர் என்றும், மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அவர்களை கவரும் வகையில் சமூக வலைத்தளங்களில் டிக்டாக் வீடியோக்களில் செய்து வந்தார்.

தன்னுடன் உல்லாசமாக இருக்க ஒப்புக்கொள்ளும் பெண்களுடன் இருக்கும் தருவாயில், அவர்களுக்கே தெரியாமல் அந்தரங்க காட்சிகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். எடுத்தது மட்டுமின்றி அவற்றை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். 

மேலும் தன்னுடன் இணக்கமாக இருக்க ஒப்புக் கொள்ளும் பெண்களை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளார். 

இந்நிலையில் இவர் ஒரு மருத்துவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அந்த மருத்துவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். தன்னுடைய அந்தரங்கம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.தன்னிடமிருந்து 7 லட்ச ரூபாயையும் காசு பறித்துக் கொண்டதாக அந்த மருத்துவர் புகாரளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் காசி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த செய்தியானது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலானது‌. 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, காசியின் வீட்டை பரிசோதித்தபோது 2 ஹார்ட் டிஸ்க்குகள், 7 ஏடிஎம் கார்டுகள் முதலியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் காசிக்கு உடந்தையாக 4 நண்பர்கள் இருந்துள்ளனர். பிரபல நடிகரின் மகளும் காசியின் வலையில் சிக்கியுள்ளது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பெரும் அரசியல்வாதிகளுக்கும் இதில் சம்பந்தமிருப்பதை காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் பள்ளி மாணவிகள் கூட காசியின் வலையில் சிக்கி சீரழிந்தது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பள்ளி மாணவிகளும் உதவி ஆய்வாளரின் மகளொருவர் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமின்றி காசிக்கு எதிராக புகார் கொடுக்க நினைக்கும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைன் மூலமாகவும் புகார் தரலாம் என்று காவல்துறையினர் கூறினர். அதன்படி காசியால் பாதிக்கப்பட்டு தற்போது வெளிநாட்டில் வசித்துவரும் பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார். "காசியால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருவர். ஆனால் நான் தற்போது வெளிநாட்டில் உள்ளேன். இந்த புகாரானது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரிடம் செல்ல வேண்டும். காசி சாதாரண ஆளில்லை. அவன் ஒரு குரூப்பாக இந்த கொடுமைகளை செய்து வருகிறான். அவனுடைய கூட்டாளிகளையும் விட்டுவிடாமல் அனைவரையும் தண்டிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இன்று நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காசி நீல நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்து கொண்டு நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மேலும் அவர் முகக்கவசம் அணிந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவருடைய முகத்தை படம் பிடிக்க சென்றபோது எந்த ஒரு தயக்கமும் இன்றி காதல் சின்னத்தை காட்டியுள்ளார். எப்படிப்பட்ட கேவலமான குற்றத்தை செய்துவிட்டு எந்தவித பயமும் இன்றி முகத்தை காட்டிய காசியை பலரும் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.