காதல்! காமம்! கற்பழிப்பு! SI மீது கணவனை இழந்த பெண் பகீர் புகார்!

தன்னை ஏமாற்றி கற்பழித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக பேஸ்புக் மூலம் மிரட்டிய சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவனந்தபுரம் அருகே தும்பா என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள காவல் நிலையத்தில் சுமேஷ் லால் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இதனருகே அஞ்சல் என்னும் பகுதி உள்ளது. சுமதி என்பவர் இந்த பகுதியில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு திடீரென்று இவர் சப் இன்ஸ்பெக்டர் மீது பேஸ்புக்கில் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்தார்.

அதாவது சுமேஷ் லால் தன்னை காதலித்து ஏமாற்றி கற்பழித்ததாக அதில் பதிவு செய்திருந்தார். அவர் கூறியதாவது, "அஞ்சல் பகுதி சப்-இன்ஸ்பெக்டரான சுமேஷ் லால் தன்னுடன் பேஸ்புக் மூலம் நண்பரானார். நீண்ட நாட்கள் என்னுடன் மெசேஜ் செய்து கொண்டிருந்தார். இருவரும் நெருங்கி பழகினோம். எங்கள் நெருக்கமானது பின்னர் காதலாக மாறியது.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுமேஷ் லால் என்னை வற்புறுத்தினார். நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்று கூறினேன். அதற்கு அவர் பரவாயில்லை உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு என்னை அழைத்துச் சென்றார். இறுதியாக என்னை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தார்.

அதன் பிறகு என் தொடர்பை அவர் துண்டித்து விட்டார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று கூறினார். இந்த வீடியோவானது வைரலாக பரவியது. மேலதிகாரிகளின் கவனத்திற்கு சென்றவுடன், அவர்கள் சுமதியை சந்தித்து அவர் தரப்பு வாதத்தை கேட்டறிந்தனர். பின்னர் எழுத்துமூலம் புகாரை பெற்றுக்கொண்டனர். தற்போது வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது திருவனந்தபுரம காவல்துறை அதிகாரிகளிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.