காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் காவல்துறை அதிகாரி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்பி முந்தி விரிச்சேன்! 3 முறை கர்ப்பமானேன்! 3 முறையும் கருவை கலைத்தேன்! ஆனால்..! கதறும் பெண் போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள பாண்டுரங்கன் தொட்டி என்னும் கிராமத்தில் நதியா என்பவர் வசித்துவருகிறார். இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் டாக் ஸ்குவாட் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இதனிடையே இருவரும் நெருங்கி பழக தொடங்கினர். நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. பல்வேறு இடங்களில் உல்லாசமாக சுற்றியுள்ளனர். இதனால் நதியா 3 முறை கர்ப்பமானார். 3 முறையும் கண்ணனின் அறிவுறுத்தல் படி கருவை கலைத்தார்.
ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எளிதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நதியா நினைத்து கொண்டிருந்த தருணத்தில், கண்ணன் திருமணத்திற்கு மறுத்துள்ளார். நதியா பலமுறை மன்றாடியும் கண்ணன் இருவரது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்திற்கு முன்பு 3 முறை கருவைக் கலைத்ததற்காக திருமணம் செய்ய மறுப்பதாக கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்து போன நதியா எறும்பு சாக்பீஸ் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டெடுத்து அஞ்செட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் தற்போது அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தியானது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.