பெண்கள் பிரா தெரிவது போல் ஆடை அணிவதில் என்ன தப்பு? ஐபிஎஸ் அதிகாரி நச் கேள்வி!

பிரபல காவல்துறை அதிகாரி ஐபிஎஸ் ரவி அவர்கள் சமீபத்தில் வைரலாகி வந்த டிக் டாக் பெண்ணை பற்றி கேட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் பெண் ஒருவர் டிக் டாக்கில் உள்ளாடை தெரிவது போல ஆடை அணிந்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் என் உள்ளாடை தெரிந்தால் உனக்கு என்ன. 2000 ரூபாய் கொடுத்து பிரா வாங்குகிறோம். அதை காட்டுவதும் காட்டாததும் எங்களுடைய விருப்பம். பிடித்தால் பாருங்கள். இல்லையெனில் பார்க்காதீர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார்.

இந்த வீடியோ பற்றி காவல்துறை அதிகாரி ஐபிஎஸ் ரவி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, பெண்கள் என்ன உடை அணிந்தாலும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆண்கள் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து செல்கிறோம். பெண்கள் அதுபோல் அணிந்தால் என்ன தவறு இது அவர்களது உரிமை எனவும் அவர் கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.