அம்மா அப்பா என்னை கவனிக்கமாட்றாங்க! 11ம் வகுப்பு மாணவி எடுத்த அதிர வைக்கும் முடிவு!

வாய்க்காலில் விழுந்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவமானது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே மொடவண்டி பாளையம் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் தொழில் புரியும் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். 2-வது மகளான கோகுல சிவரஞ்சினி பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். 

பழனிச்சாமியும் அவருடைய மனைவியும் மற்ற இரு பிள்ளைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கோகுல சிவரஞ்சினி கருதி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். 21-ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்ற கோகுல சிவரஞ்சினி வீடு திரும்பவில்லை. இவரின் பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கோகுல சிவரஞ்சினியை கண்டுபிடிக்க இயலவில்லை.  உடனே அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிவரஞ்சினியை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிராமத்துக்கு அருகே உள்ள அலிங்கியம் வாய்க்காலில் சிவரஞ்சினியின் உடல் மிதந்து கொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிவரஞ்சனியும் பெற்றோருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிவரஞ்சினியும் உடலை மீட்டு எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி 21-ஆம் தேதியன்று வாய்க்காலுக்கு சைக்கிளில் வந்துள்ளார். பிறகு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதனை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். மாணவியின் உடலை கண்ட பெற்றோர் கடுமையாக அழுதனர்.

இந்த சம்பவமானது நம்பியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.