விஸ்வாசம் வசூலில் சீட்டிங்! அஜித்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த தலைவர் - தளபதி பேன்ஸ்!

முன்னணி திரைப்பட விநியோகஸ்தர்களில் ஒருவரான சந்தோஷ் சுப்பிரமணியம் கூறியுள்ள பாக்ஸ் ஆபிஸ் பற்றிய கருத்துக்கள் அஜித் ரசிகர்களிடையே தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


சந்தோஷ் சுப்ரமணியம் , அஜித்தை குறிவைத்து பேசிய பேச்சுக்கள் தற்போது ரஜினி மற்றும் விஜய் அவர்களின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. அதாவது விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்களின் வசூல் சீட்டிங் செய்யப்பட்டுள்ளதாக சந்தோஷ் சுப்பிரமணியம் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக விஜய் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விநியோகஸ்தர் சந்தோஷ் சுப்ரமணியம் சமீபத்தில் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்தார். அதில் பேசிக்கொண்டிருக்கும்போது ஒவ்வொரு திரைப்படத்தின் வசூலை பற்றிய பேச்சு ஆரம்பித்தது . அப்போது பேசிய அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீசான இரண்டு பெரிய திரைப்படங்களில் ஒரு திரைப்படத்தின் வசூல் போலியானது என்று குற்றம் சாட்டினார் .

விநியோகஸ்தர் சந்தோஷ் சுப்ரமணியம் உஷாராக அந்த இரண்டு படங்களின் பெயரை குறிப்பிடாமல் அதன் வசூலைப் பற்றி பேச ஆரம்பித்தார். ஒரு திரைப்படம் 100 கோடியை ஈட்டியது ஆகவும் இன்னொரு திரைப்படம் 125 கோடியை ஈட்டியது ஆகவும் அந்த திரைப்படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்கள் அறிவித்ததை சுட்டிக்காட்டினார் . அவர் பெயர் குறிப்பிடாமல் சொன்ன 2 திரைப்படங்கள் ரஜினியின் பேட்ட மற்றும் நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படங்கள் ஆகும். 

விசுவாசம் திரைப்படத்தை கேஆர்ஜி ஸ்டுடியோஸ் விநியோகித்தது . அதேபோல் பேட்டை திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது இந்த இரண்டு நிறுவனங்களுமே தங்களுடைய வசூல் வேட்டை குறித்த தகவல்களை ரசிகர்களுக்கு அளித்த வண்ணம் இருந்தனர். ஒருகட்டத்தில் விசுவாசம் திரைப்பட விநியோகஸ்தரான கேஆர்ஜி நிறுவனம் சார்பில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தை விட அஜித் நடித்த விசுவாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வெற்றியை பெற்றது என்று அறிவித்திருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பின்னர் அவர் அஜித்தின் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை பற்றி பேச ஆரம்பித்தார். ஒரு திரைப்படமானது வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது என்றால் அடுத்த நாளே அந்தப் படம் மாபெரும் வெற்றி என்று அறிவிப்பது தவறான ஒன்று .அதை தான் இந்த திரைப்படங்கள் திரைப்பட குழுவினர் செய்திருந்தனர் என்று கூறியிருந்தார். இது மக்களிடையே தவறான கருத்தை கொண்டு சேர்க்கும் என்றும் கூறினார் சுப்ரமணியம்.

இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது என்று அவர்கள் கூறினாலும் அந்த திரைப்படத்தில் நடித்த முன்னணி நடிகர்களுக்கு அளித்த சம்பளத்தை தவிர எடுக்கப்பட்ட லாபத்தை வைத்து தான் அதன் அதனுடைய வெற்றியை நம்மால் தீர்மானிக்க இயலும் எனவும் கூறினார். இதனுடைய உண்மை நிலவரம் தயாரிப்பாளரை தவிர வேறு எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை எனவும் சந்தோஷ் சுப்ரமணியம் பேசியிருந்தார்.