பஞ்சு மிட்டாய் தருவதாக 59 பிஞ்சு சிறுமிகளுடன் தகாத செயல்! பெட்டிக் கடைக்காரனின் கொடூர முகம்!

கேரள மாநிலத்தில் மிட்டாய் வாங்க வந்த 59 பெண்குழந்தைகளை சீரழித்துவிட்டு தலைமறைவான பெட்டிக்கடைக்காரனை போலீசர் தேடி வருகின்றனர்.


பாலக்காட்டை அடுத்த பட்டாம்பி திருத்தலா பகுதியை சேர்ந்தவன் 57 வயது கிருஷ்ணன். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகே பெட்டிக் கடை வைத்துள்ள இவன், மிட்டாய் வாங்க அரும் 6,7-ஆம் வகுப்பு மாணவிகளை மிரட்டி கடைக்குள் அழைத்து சென்று பாலியல் அத்துமீறாலில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறாப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட ஒரு மாணவி ஒருமுறை கொடுமையை பொறுக்க முடியாமல் வகுப்பு ஆசிரியையிடம் சொல்லி அழுத போது இது பூதாகரமாக வெடித்தது. அந்த ஆசிரியையின் புகாரின் பேரில் வந்த குழதைகள் நல அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த இழிபிறவி 2 ஆண்டுகளில்  59 மாணவிகளிடம் அத்துமீறியது தெரிய வந்தது. 

இது தொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணன் மீது போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கைது செய்வதற்குள் தலைமறைவாகிவிட்ட கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.