மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞன்! 20 நிமிடங்களுக்கு பிறகு உயிர்த்தெழுந்த அதிசயம்!!

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய இளைஞர் ஒருவர் 20 நிமிடங்களுக்குப் பிறகு உயிர் பிழைத்தது அமெரிக்கா நாட்டில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மிச்சிகன் மாகாணத்தில் லிவோனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 20 வயது இளைஞரான மைக்கேல் ட்ரூட் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்னர், தன் வீட்டில் ஏணி மீது ஏறி கொண்டிருந்தார். அப்போது மின்சார கம்பிகளை தவறுதலாக தொட்டுவிட்டார். உடலில் மின்சாரம் பாய்ந்து, ஏணியில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

அருகில் இருந்தோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மைக்கேல் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிர்காக்கும் கருவிகளையும் அவருடைய உடம்பிலிருந்து அகற்றினர்.

பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடலை தயார் செய்வதற்கு சற்று தாமதமானது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மைக்கேல் படுத்துக்கொண்டிருந்த கட்டிலானது ஆட தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவருக்கு மீண்டும் சிகிச்சை அளித்தனர்.

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அவர் உயிர் பிழைத்தார். பின்னர் மருத்துவர்கள் மின்சாரம் பாய்ந்ததில் அவருடைய பாதங்கள் மறத்து போனதாகவும், மூளை,இதயம் ஆகியவற்றை வைத்து எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினர்.

இந்த சம்பவமானது அந்த மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.