9 முறை எம்எல்ஏ! 4 முறை அமைச்சர்! ஆனாலும் ஊழல் கறைபடியாதவர்! திமுகவில் இப்படி ஒரு தலைவரா? நெகிழ வைத்த பேராசிரியர்!

9 முறை எம்எல்ஏவாகவும், 1 ஒருமுறை எம்பியாகவும், திமுக பொதுச் செயலாளராகவும், சமூகநல்த்துறை, கல்வி அமைச்சர், கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் என முக்கிய பொறுப்புகளை வகித்த போதும் ஒரு போதும் ஊழல் புகாரில் சிக்காதவர் பேராசிரியர் அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.


திமுகவில் ஒரே ஒரு முறை வார்டு கவுன்சிலராகவோ, எம்எல்ஏவாகவோ, எம்பியாகவோ, அமைச்சராகவோ பதவி வகித்தால் அவர்கள் மீது ஏதோ ஒரு ஊழல் புகார் நிச்சயமாக எழும். திமுகவின் கடை நிலை நிர்வாகிகள் முதல் மேல்மட்டத்தில் உள்ள ஸ்டாலின் வரை அனைவர் மீதும் ஊழல் புகார்கள் உண்டு. கலைஞர் தொடங்கி அவரது மகள் கனிமொழி வரை திமுகவில் ஊழல் புகாரில் சிக்காத பிரபலங்களே இல்லை என்று கூறலாம்.

ஆனால் திமுக பொதுச் செயலாளராக கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் பதவி வகித்தவர் அன்பழகன். 1971ம் ஆண்டே சமூக நலத்துறை அமைச்சர் ஆனார். அதன் பிறகு கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் என அவர் முக்கிய இலாக்காக்களையும் கவனித்து வந்தார். ஆனால் அவர் சார்ந்த துறை மீது எந்த முறைகேடு புகாரும் எழுந்தது இல்லை.

2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் திமுகவின் முன்னணி தலைவர்கள் கலைஞர், ஸ்டாலின் உள்ளிட்டோர் ஊழல் புகார்களில் கைது செய்யப்பட்டனர். ஆனால் அப்போது திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மீது ஊழல் புகார் கூறப்படவில்லை. அவர் கைது செய்யப்படவும் இல்லை.

அதன் பிறகு 2006ம் ஆண்டு திமுக அரசில் நிதி அமைச்சராக பதவி வகித்த அன்பழகன், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ ரேசன் அரிசி திட்டத்தை அறிமுகம் செய்தவர். இப்படி திமுகவில் இருந்தாலும் ஊழல் கரை படியாதவர் என்பதால் அன்பழகன் ஆச்சரியத்திற்கு உட்பட்ட ஒரு தலைவர் தான்.