நடை சாத்திய பிறகு கருவறையில் தானாக ஆடிய ஊஞ்சல்! அந்தியூர் அம்மன் கோவிலின் மிரள வைக்கும் சிசிடிவி காட்சி!

கோவிலில் நடை சாத்தப்பட்ட பிறகு ஊஞ்சலாடுவது போன்று பதிவாகியிருந்த காட்சிகள் பக்தர்களை பரவசமூட்டியுள்ளன.


அந்நியூர் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சில நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல நடை சாத்தப்பட்டது. ஆனால் நடை சாத்தப்பட்ட பின்னர் கருவறையில் ஊஞ்சலாடுவது போன்ற சத்தம் கேட்டதாக மக்கள் கூறியுள்ளனர்.

மறுநாள் கோவிலின் செயலரான சரவணன் என்பவர் கோவிலின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கோவிலின் கருவறையில் 2 மணி நேரத்திற்கும் மேலான வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்று தெரிந்துள்ளது.

இதனைப்பார்த்த பொதுமக்கள் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் ஈடுபடுவது போன்று வீடியோவில் அமைந்துள்ளதாக கூறி பரவசம் அடைந்துள்ளனர்.