நாடாளுமன்ற தேர்தல்! தினகரனின் அமமுகவிற்கு முஸ்லீம் அமைப்பு ஆதரவு!

நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு கேட்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு வருகைதந்த அமமுக நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல் அடிப்படையில் அதன் பொறுப்பாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ தலைமையில் அக்கட்சியின் மாநில மாவட்ட  நிர்வாகிகள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு இன்று(20.02.19)  மாலை வருகை தந்தனர்.

அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் துணை தலைவர் முஹம்மது முனீர் பொது செயலாளர் முஹம்மது சித்திக் பொருளாலர் பிர்தெளஸ் துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி மக்கள் ரிப்போர்ட் முதன்மை ஆசிரியர் சையது இக்பால் மாநில செயலாளர் அபுபைசல் ஆகியோர் வர வேற்றனர் 

பின்னர் டிடிவி தினகரன் கூறிய அடிப்படையில் வெற்றி வேல் அவர்கள் INTJ நிர்வாகிகள் இடத்தில் நீங்கள் அம்மா காலத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இருந்தீர்கள் போன நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிக்காத போது நீங்கள் மட்டுமே  ஆதரவு கொடுத்திர்கள்.

தினகரன் அவர்கள் ஆர் கே நகரில் போட்டியிட்ட போது எங்களுக்கு பக்க பலமாக நீங்கள் மட்டுமே உடன் இருந்தீர்கள்.  முஸ்லிம்களுக்கு எப்போதும் உறுதுணையாக அமமுக இருக்கும் பாஜக உடன் எப்போதும் எந்த சூழ்நிலையையும் கூட்டணி வைக்க மாட்டோம் 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். வெற்றி வேல் மற்றும் வந்த சகோதரர்களுக்கு இஸ்லாமிய நூல்கள் திர்குர்ஆன் வழங்க பட்டது. ஆதரவு அளிப்பதாக உறுதியும் அளிக்கப்பட்டது.