6 வயதில் தீராத நோய்! திடீர் மரணம்! குழந்தையுடன் சடலத்துடன் வசித்த பெற்றோர்! கண்ணீர் வரவழைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

இறந்துபோன தன்னுடைய மகளுடன் பெற்றோர் 5 நாட்கள் செலவழித்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் மால்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு கிறிஸ்டியன் டி ரொசாரியோ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 30. இவருடைய மனைவியின் பெயர் எமிலி. இத்தம்பதியினருக்கு டார்சி என்ற 6 வயது மகளும், பே என்ற கை குழந்தையும் உள்ளனர்.

டார்சி பிறந்தபோது அவருக்கு அபூர்வமான ஒரு நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதற்கு அவருக்கு கிட்டத்தட்ட 20 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட போதிலும், அந்த நோயானது குணமடையவில்லை. டார்ஸிக்கு தங்கை பிறக்க வேண்டும் என்ற பெருத்த ஆசை இருந்து வந்தது. இதற்காகவே அவருடைய பெற்றோர் ஒரு குழந்தையை பெற்றெடுத்தனர். இந்நிலையில் 5 நாட்கள் மட்டுமே டார்சியால் குழந்தையுடன் விளையாட முடிந்தது. ஜனவரி மாதம் 24-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். 

பிறந்த குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதா, அல்லது இறந்து போன குழந்தைக்கு காரியம் செய்வதா என்று தம்பதியினர் பெரிய குழப்பம் அடைந்தனர். மருத்துவர்களின் உதவியுடன் இறந்துபோன டார்சியின் உடலை 5 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தனர்.

5 நாட்கள் கழித்து குழந்தையின் உடலை தங்கள் வீட்டு அருகேயுள்ள இடத்தில் புதைத்துள்ளனர். எப்பொழுதும் தன் தாய் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பிய டார்சியை எப்போது வேண்டுமோ பார்க்க வேண்டும் என்பதற்காக தங்கள் வீட்டு அருகிலேயே அவரை புதைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.