எய்ட்ஸ் பாதித்த மணப்பாறை தம்பதிக்கு பிறந்த 3வது குழந்தை! லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்ற மற்றொரு தம்பதி! அதிர வைக்கும் காரணம்!

எச்.ஐ.வி பாதித்த தம்பதியினர் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியில் எச்.ஐ.வி நோய் பாதித்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இருவருமே எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னால் இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. தம்பதியினர் வறுமையில் வாழ்ந்து வந்ததால் இந்த குழந்தையை விற்பதற்கு முடிவெடுத்துள்ளனர். அதன்படி மருத்துவமனை ஊழியர் ஒருவரின் உதவியுடன் 50 வயதான தம்பதியினர் ஒருவரிடம் குழந்தையை விற்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை புதிதாக வாங்கிய தம்பதியினர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது குழந்தை மிகவும் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்குமாறும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தம்பதியினர் தாய்ப்பால் கொடுக்க மறுத்துள்ளனர். உடனடியாக மருத்துவர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை விலைக்கு வாங்கிய உண்மையை வயதான தம்பதியினர் கூறியுள்ளனர். இத்தம்பதியினர் உடைய ஆண்குழந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துள்ளார். 

மகனில்லாத வருத்தத்துடன் முதியவர்கள் காணப்பட்டனர். மருத்துவமனை ஊழியர் நிச்சயமாக ஒரு ஆண் குழந்தையை வாங்கி தருவதாக அவர்களிடம் கூறியுள்ளார். அதன்படி எச்ஐவி பாதித்த தம்பதியினரின் குழந்தையை வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக தம்பதியினரிடம் 20 ஆயிரம் ரூபாய் கமிஷன் பெற்றுள்ளார். 

இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.