துரத்திய துர் மரணங்கள்! 3 மாதங்களுக்குள் அடுத்தடுத்து உயிரிழந்த 5 பிள்ளைகள்! தம்பதிக்கு பிறகு அரங்கேறிய கொடூரம்!

தொடர்ச்சியாக 5 பிள்ளைகள் உயிரிழந்ததால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனின் வயது 49. இவருடைய மனைவியின் பெயர் லதா. லதாவின் வயது 41. இத்தம்பதியினருக்கு 5 பிள்ளைகள் பிறந்தனர். ஆனால் அவர்களில் 3 கடந்த 3 மாதங்களுக்குள் உயிரிழந்துள்ளனர். 4-வது பிள்ளையான லிஜித் என்ற 8 வயது சிறுவன் சென்ற மாதம் உயிரிழந்துள்ளான். 

கடைக்குட்டியாக பிறந்த விம்யா என்ற பெண் பிறந்ததிலிருந்தே நோய்வாய்ப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தங்களுடைய சொத்துக்கள் முழுவதையும் செலவழித்து விம்யாவுக்கு சிகிச்சை பார்த்து வந்தனர். ஆனால் பேரிடியாக சென்ற வாரம் 18 வயதான விம்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சில நாட்களிலேயே வயது மூப்பின் காரணமாக ராதாகிருஷ்ணனின் தாயாரும் இறந்துள்ளார். தொடர்ச்சியான இழப்புகளை சந்தித்து வந்த தம்பதியினருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் அவர்கள் அக்கம்பக்கத்தினருடன் பேசாமல் தனித்து வாழ்ந்து வந்தனர். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் எர்ணாகுளத்துக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளனர்.

ராதாகிருஷ்ணன் காலையில் தன்னுடைய 5 சகோதரர்களையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மதியம் 1:30 மணியளவில் எர்ணாகுளம் பகுதியின் ரயில்நிலையத்தில் 2 பேரின் சடலங்கள் கிடப்பதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். விசாரணை நடத்தியதில் அந்த சடலங்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் லதா ஆகியோரது என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.