மே 23ல் பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் சூட்டிய முஸ்லீம் தாய்! குடும்ப எதிர்ப்புகளை உதறினார்!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மே 23-ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயரிடப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவைச் சேர்ந்தவர் மெனஜ் பேகம் இவருக்கு கடந்த 23-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தை பிறந்ததை தெரிவிப்பதற்காக துபாயில் உள்ள தனது கணவரை மெனஜ் பேகம் தொலைபேசியில் தொடர்புகொண்டார். 

அப்போது கணவர் தன்னிடம் பிரதமர்  மோடி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டாரா என கேட்டதாகவும், தானும் தனக்கு குழந்தை பிறந்த விவரத்தை தெரிவித்ததோடு மோடி வெற்றி பெற்ற தகவலையும் தெரிவித்ததாகக் கூறிய மெனஜ் பேகம், அந்த நேரத்தில் தனது குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் வைக்க வேண்டும் என்று தோன்றியதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி போன்று தனது குழந்தையும் சிறந்த சிறந்த செயல் வீரனாகவும், உயரிய மனிதனாகவும் திகழ வேண்டும் என விரும்புவதாகவும், அந்த ஆவலிலேயே தனது குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் வைத்துள்ளதாகவும், மெனஜ் பேகம் கூறினார். இதற்கு தனது கணவர் ஒப்புக் கொண்டதாக கூறி பேகம் ஆனால் மாமனால் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது குழந்தைக்கு நரேந்திர மோடி என்றே தான் பெயர் சூட்டியுள்ளதாகவும் கூறி உற்சாகம் அடைந்தார் மெனஜ் பேகம்.