உயிரிழந்த மகளால் உயிர் பெற்ற சிறுவன்..! நேரில் சந்தித்த பெற்றோருக்கு கிடைத்த நெகிழ்ச்சி அனுபவம்!

இறந்துபோன மகளுடைய சிறுநீரகத்தை தானம் செய்ததால் பிழைத்த சிறுவனை அப்பெண்ணின் பெற்றோர் சந்தித்திருந்தது சவுதி அரேபியாவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பூர்வீகத்தை கொண்ட அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு தேவிஸ்ரீ என்ற 6 வயது மகளிருந்தார். 

சென்ற ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருந்தபோது தேவிஸ்ரீ சுவாசிப்பதில் சிரமம் கொண்டுள்ளார். மேலும் வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவருடைய பெற்றோர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் செயலிழந்த காரணத்தினால் சிறுமி உயிரிழந்ததாக கூறினர். உடனடியாக பெற்றோர் அவளுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முடிவெடுத்தனர்.

அதன்படி அந்த மருத்துவர்களிடம் தேவரின் உடல் உறுப்புகளை தானம் செய்து விடுமாறு கூறியுள்ளனர். அதன்படி அதே நாட்டை சேர்ந்த தீபக் ஜான் ஜேக்கப் என்பவருடைய 7 வயது சிறுவனுக்கு தேவிஸ்ரீயின் ஒரு சிறுநீரகம் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுவன் கடந்த சில ஆண்டுகளாகவே டயாலிசிஸ் செய்து வருவதாகவும், உரிய மாற்று சிறுநீரகத்திற்காக காத்து கொண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தேவியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். உடனடியாக சிறுநீரகத்தை தானம் செய்வதற்கு அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு  பின்னர் அந்த சிறுவன் நலமடைந்து உள்ளான். புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து அந்த சிறுவன் வெளியே வந்த போது, தேவிஸ்ரீயின் பெற்றோர் அந்த சிறுவன் கட்டி வைத்துள்ளனர். 

அந்த சிறுவனும் இவர்கள் யார் என்று புரிந்து கொண்ட பின்னர் கட்டியணைத்து முத்தமிட்டுள்ளான். தேவிஸ்ரீயின் மற்றொரு சிறுநீரகமானது 15 வயதான அபுதாபியில் சேர்ந்த இளைஞருக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த செய்தியானது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.