நியுஸ் 7 தொலைக்காட்சியில் இணையும் ரங்கராஜ் பாண்டே..! மீண்டும் ஆரம்பமாகிறது ஆட்டம்!

தந்தி தொலைக்காட்சியின் அடையாளமாக இருந்த ரங்கராஜ் பாண்டே தற்போது நியுஸ் 7 தொலைக்காட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரங்கராஜ் பாண்டே தந்தி தொலைக்காட்சியில் அசைன்மென்ட் ஹெட்டாக பணியில் சேர்ந்தார். பிறகு தனது திறமையின் மூலமாக தந்தி தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுக்கு ஆசிரியராக உயர்ந்தார். அதோடு மட்டும் அல்லாமல் கேள்விக்கென்ன பதில், ஆயுத எழுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தனி முத்திரை பதித்தார்.

தமிழகத்தின் அர்னப் கோஸ்வாமி என புகழப்பட்ட பாண்டே, தீவிர வலதுசாரி ஆதரவாளராக செயல்பட்டார். தமிழ் ஊடகங்கள் முழுக்க முழுக்க இடதுசாரி, திராவிட சித்தாந்தம் கொண்ட நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் வலதுசாரி ஆதரவாளரான பாண்டேவின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்நத்து. 

ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு மிகவும் நெருக்கமானார். இதுவே தந்தி தொலைக்காட்சியில் அவருக்கு நெருக்கடியை ஏற்பட்டது. உரிமையாளரை பொருட்படுத்தாமல் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தந்தி தொலைக்காட்சியில் இருந்து விரட்டப்பட்டார். அதன் பிறகு பல்வேறு ஊடக நிறுவனங்களில் பாண்டேவை இணைக்க பாஜக முயற்சி செய்தது.

ஆனால் பாண்டேவை சேர்த்துக் கொள்ள எந்த ஊடகமும் தயாராக இல்லை. இதற்கிடையே நியுஸ் 7 தொலைக்காட்சியுடன் பாஜக மேலிடம் நடத்தி டீலிங் அடிப்படையில் பாண்டே அங்கு சேர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. துவக்கத்தில் திரைமறைவில் பணியாற்றும் அவர் சுமூக நிலை ஏற்பட்ட பிறகு மீண்டும் டிவியில் தோன்றுவாராம்.