கொரோனா பரவுவதால் குருத்தோலை ஊர்வலத்திற்கு நோ..! மனிதர்களுக்காக மத நம்பிக்கையை தூக்கி எரிந்த கிறிஸ்தவர்கள்..!

உலகையே அச்சுறுத்தும் கொரனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடம் ஈஸ்டர் கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டு வீட்டில் இருந்தே ஜெபிக்குமாறு கிறித்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரனா வைரஸ் பாதிப்பு இன்று 192 நாடுகளை மிரட்டி வருகிறது. நாளுக்கு நாள் கொரனா பாதிப்பு மனிதர்களிடையே அதிகம் பரவுகிறதே தவிர குறைந்த பாடில்லை. இதனால் உலகமே முடக்கப்பட்டு இனி வரும் காலங்களில் எப்படி வாழ்வோம் என்ற அச்சம் மக்களுக்கு வந்துவிட்டது.

கொரனா அச்சம் காரணமாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு அனைவரும் வீட்டில் இருந்தே பிரார்த்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பவுர்ணமியன்று நடைபெற உள்ள திருவண்ணாமலை கிரிவலமும் ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில் கிறித்துவர்கள் வழிபடும் குருத்தோலை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டியது. இந்த கொண்டாட்டத்தில் கிறித்துவர்கள் ஜெபித்தவாறே ஊர்வலம் சென்று ஆலயங்களில் வழிபடுவர்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் இன்று குருத்தோலை ஊர்வலங்கள் மற்றும் வழிபாடுகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் வீட்டில் இருநதே ஜெபிக்குமாறு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏப்ரல் 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற வேண்டிய புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.