எடப்பாடி பழனிசாமியை தேடிவந்த ராமதாஸ்..! உள்ளாட்சித் தேர்தல் பஞ்சாயத்து ஆரம்பம்

முதல்வரின் மாமனார் மறைவு குறித்து துக்கம் விசாரிக்கும் சாக்கில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர்.


விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றதுமே, தனது தோட்டத்தில் விருந்துக்கு வருமாறு அ.தி.மு.க. பெருந்தலைகள் அனைவருக்கும் அழைப்பு விடுதார் ராமதாஸ். அவர் எதற்காக கூப்பிடுகிறார் என்பது தெரியும் என்பதால் சி.வி.சண்முகம் தவிர வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. 

அதனால், முதல்வர் மாமனார் மறைவை சாக்காக வைத்து முதல்வரை ராமதாஸ் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறார். அதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், தங்களுக்கு வேண்டிய மாநகராட்சிகள் எவை என்பது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், எடப்பாடியார் அதுகுறித்து பின்னர் பார்க்கலாம் என்று நழுவிக்கொண்டாராம். எப்போதுமே கூட்டணியில் முதல் ஆளாக நுழைந்து இருப்பதை அள்ளிக்கொள்வதுதான் பா.ம.க.வின் ஸ்டைல். இந்த முறை அது பலிக்காது என்று சொல்கிறார்கள்.பார்க்கலாம்.