வாக்கு எண்ணிக்கை நாளில் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

வாக்கு எண்ணிக்கை நாளன்று நரேந்திர மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


மே 23 அன்று இந்தியாவுக்கு மிக முக்கியமான நாள். ஏனென்றால் இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லப்போவது காங்கிரசா அல்லது பாஜகவா என்பதை தீர்மானிக்கும் நாள் அன்று. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டுவிட்டன. அன்று முழுவதும் தொலைக்காட்சி சேனல்களும் அதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் பரபரப்புடன் காணப்பட்டனர்.

அடுத்தது எந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கப் போகிறது என்ற பதற்றம் மக்களை தொற்றிக் கொண்டதை பார்க்க முடிந்தது. சாதாரண மக்களுக்கே இந்த நிலை என்றால் கட்சிக்காரர்கள் என்ன நிலையிலிருந்து இருப்பார்கள் என்பதை சொல்லி புரிய தேவையில்லை. ஆனால் சற்று வித்தியாசமாக வாக்கு எண்ணிக்கை நாளன்று மோடி மிகவும் கூலாக மின்னஞ்சல் பார்த்துக்கொண்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது.

அலுவல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பலருக்கு நரேந்திர மோடி மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தார். பத்தரை மணிக்கு பிறகுதான் அவர் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தெரிந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றி நிச்சயம் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் மோடி தேர்தல் முடிவுகளை கண்டுகொள்ளவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.