ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல்! கைது செய்ய துரத்தும் சிபிஐ! தப்பி ஓடும் ப சிதம்பரம்!

ப.சிதம்பரத்தை சிபிஐ வலைவீசி தேடுகிறது.


ப சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற உதவியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எடுத்து டெல்லியில் உள்ள  சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சென்றுள்ளது. அங்கு அவரை அவர்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ப சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் அவரது வீட்டு முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வீட்டில் ப சிதம்பரம் கைது செய்யப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. இதனிடையே சிபிஐக்கு பயந்து சிதம்பரம் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.