காவேரிப்பாக்கம் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயது குழந்தை விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திறந்திருந்த தண்ணீர் தொட்டி! எட்டிப் பார்த்த 1 வயது குழந்தை! அடுத்த நொடி நேர்ந்த பகீர் சம்பவம்!
காவேரிப்பாக்கம் அருகே கொண்டபுரம் என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உதயகுமார் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஒரு மகளும் ஒரு வயதில் எழிலன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
உதயகுமார் பணி நிமித்தமாக சென்னையில் பணியாற்றி வருகிறார் . ஐஸ்வர்யா வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் உதயகுமார் வீட்டின் வாசலில் தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஐஸ்வர்யா தன்னுடைய இரண்டாவது குழந்தையான எழிலனை வீட்டில் உறங்க வைத்து இருக்கிறார். அந்த குழந்தையை உறங்க வைத்துவிட்டு ஐஸ்வர்யா அருகிலிருந்த தன்னுடைய உறவினரை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். உறவினரை பார்த்துவிட்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
வீடு திரும்பியபோது ஐஸ்வர்யாவின் ஒரு வயது குழந்தை எழிலன் புதிதாக அமைக்கப்பட்ட இந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து மூச்சு திணறி மயங்கிய நிலையில் கிடந்த இருக்கிறார். குழந்தையை மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து ஐஸ்வர்யா மிகவும் அதிர்ச்சி அடைந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தையை வில்லனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை எழிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதனைக் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் இந்த வழக்கை பதிவு செய்து குழந்தையின் பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் விசாரித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டிகளை எப்போதும் மூடி வைக்கவேண்டும் எனவும் குழந்தைகள் நடமாடும் பகுதிகளில் இதுபோல் முன்னெச்சரிக்கை இல்லாமல் இருக்கக்கூடாது எனவும் அறிவுரை கூறியிருக்கின்றனர்.