அதிரடி அம்சங்களுடன் உலகை கலக்க வரும் ஒன் பிளஸ் 7!

ஒன் ப்ளஸ் நிறுவனம் எப்பொழுதும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தலை சிறந்தவர்கள். அந்த வரிசையில் ஒன் ப்ளஸ் 6T ஸ்மார்ட் போனை அடுத்து ஒன் ப்ளஸ் 7 என்ற புதிய வகை ஸ்மார்ட் போனை போனை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளனர்.


இதன் அறிமுக தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தும் இந்த  ஒன் ப்ளஸ்  7 வரும் மே 14 - ம் தேதி  உலக அளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று இந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

ஒன் ப்ளஸ்  7  ஸ்மார்ட்  போன் ஒன் ப்ளஸ் 6T - யை விட மிக சிறப்பான  அப்டேட்ஸ் உடன் வெளியாகும் என்று இந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளது.

ஒன் ப்ளஸ்  7 சிறப்பம்சங்கள் :

இதன் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுவது இதன் டிஸ்பிலே. முதன்  முறையாக  ஒன் ப்ளஸ் நிறுவனம் எந்த ஒரு நாட்ச்சும் இல்லாமல்  புல் HD டிஸ்பிலே உடன் இந்த புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. 6.5 FHD + அமோல்ட் பேனல் வசதியுடன் வெளியாக உள்ளது.  மேலும் இன்டிஸ்பிலே  பிங்கர்பிரிண்ட்  தொழில்நுட்பத்தை கொண்டது.

இந்த  ஸ்மார்ட் போன் Black yellow, Black Purple & Cyan Grey ஆகிய  மூன்று நிறங்களில் வெளியாக உள்ளது. 

இதனுடைய அடுத்த சிறப்பம்சம் இதன் கேமரா தான்.  ஒன் ப்ளஸ் 7, 48MP+ 20MP + 5MP ட்ரிப்பிள் ரியர் கேமெராவுடன் வெளியாக உள்ளது.

மேலும் 16MP கொண்ட முன் பக்க கேமெராவும் அமைந்துள்ளது. இந்த முன் பக்க கேமரா விவோ , ஒப்போ  நிறுவனங்கள் போன்ற பாப் அப் கேமரா ஆகும். இதுவே ஒன ப்ளஸ் நிறுவனத்தின் முதல் பாப் அப் கேமரா ஆகும்.

இந்த ஸ்மார்ட் போன் ஸ்னாப் டிராகன் 855 ப்ராஸ்ஸர்  கொண்டு வெளியாகவுள்ளது. மேலும் இது அண்ட்ராய்டு பை 9.0 oxygen os - இல் இயங்கும் வசதியை கொண்டுள்ளது. 

இந்த புதிய வகை ஸ்மார்ட் போன்  4150mAH  பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இது பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது. ஆனால் இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இல்லை என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட ஒன ப்ளஸ் ஸ்மார்ட் போன் விலை ரூ .39,000 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.