பட்டப்பகல்! மூதாட்டி என்றும் பாராமல் நடுத்தெருவில் இளைஞன் அரங்கேற்றிய பதைபதைக்கச் செய்த சம்பவம்!

மளிகை கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து இளைஞர் ஒருவர் செயின் பறித்த சம்பவமானது கொளத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் கொளத்தூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வயதான மூதாட்டி ஒருவர் வீட்டு வேலை செய்து வாழ்ந்து வந்தார். வழக்கமாக மளிகை பொருட்களை வாங்கும் கடையில் மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். அதன் பின்னர், மளிகை கடையின் வாயிலில் நின்று பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் மூதாட்டியிடமிருந்து செயின் பறிக்க முயன்றுள்ளார். ஆனால் முதலில் அவரால் பறிக்க இயலவில்லை. அப்போது மனிதநேயமற்ற அந்த மூதாட்டி கீழே தள்ளி தரதரவென இழுத்து அவருடைய கழுத்தில் இருந்து நகைகளை பறித்துக்கொண்டார். அதனை பார்த்தவுடன் அக்கம்பக்கத்தினர், அவனை விரட்டிப்பிடிக்க ஓடினர்.

ஆனால் அவர்களால், அந்த திருடனை பிடிக்க இயலவில்லை. தயாராக வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அந்த திருடன் அங்கிருந்து சென்றுவிட்டான். இந்த சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளில் பதிவாகியுள்ளன.

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கொளத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.