ஒரு உயிரை காப்பாற்ற அசுர வேகம்..! அப்படியே கவிழ்ந்த ஆம்புலன்ஸ்! உள்ளே இருந்த இளம் நர்ஸ் துடிதுடித்து...! பரிதாபம்!

கேரளாவில் நோயாளி ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக அசுர வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நர்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் உள்ள பெரிங்கொட்டுகாராவில் தன் பெற்றோருடன் வசித்து வந்தவர் டோணா இவருக்கு வயது 23. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அருகிலுள்ள அந்திக்காட் மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு ஆம்புலன்ஸில் பணி ஆற்ற மருத்துவ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் டோனாவும் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக செய்து வந்திருக்கிறார். நேற்றையதினம் மாலை 7 மணி அளவில் டோனா பணியாற்றிய மருத்துவமனையின் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்துள்ளது. அதில் ஒருவர் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாக தகவல் வழங்கப்பட்டது.

இந்த தகவலைக் கேட்ட டோனா மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் அஜய் குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்தனர். நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்ஸ் டிரைவர் அதிவேகமாக ஆம்புலன்சை இயக்கியிருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் ஆம்புலன்ஸ் , ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழக்க தொடங்கியது. ஆகையால் ஆம்புலன்ஸ் யாரும் இல்லாத ஒரு வீட்டின் மீது அதிவேகமாக மோதியது. இது நேரத்தில் ஆம்புலன்ஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸில் சிக்கிக் கொண்டிருந்த விஜயகுமார் மற்றும் டோனா ஆகிய இருவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்தபோது டோனாவிற்கு முதுகெலும்பு மற்றும் மார்பகங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த டோனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த ஆம்புலன்சில் ஓட்டி வந்த அஜய்குமார் அதிஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். 

இதுகுறித்து கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.