என் தோழி என்னை அழைக்கிறாள்..! தனக்குத் தானே விஷ ஊசி! இளம் நர்சின் பகீர் முடிவு! அதிர வைக்கும் காரணம்!

நர்சு ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருவொற்றியூரில் அண்ணாமலை நகர் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு நந்தினி என்ற இளம்பெண் வசித்து வந்தார். தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருடைய பெற்றோர் அத்திப்பட்டியில் விவசாயம் தொழில் செய்து வந்தனர்.

நந்தினி தன்னுடைய சகோதரியான சுஜாதாவுடன் திருவொற்றியூரில் தங்கி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் படுக்கை அறையில் நந்தினி ரத்தம் சிந்தியவாறு மயங்கி கிடந்தார். பதறிப்போன சுஜாதா அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனையில் நந்தினியை அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தினி துரதிஷ்டவசமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சுஜாதாவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் நந்தினி கைப்பட எழுதியிருந்த கடிதத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த கடிதத்தில் தன்னுடைய மரணத்திற்கு வேறு யாரும் காரணமில்லை என்று கூறப்பட்டிருந்தது.

வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை ஊசியின் மூலம் ஏற்றி உடலில் சுற்றிக்கொண்டு நந்தினி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நந்தினியின் நெருங்கிய தோழி அவர் ஒன்பதாம் படிக்கும் போது உயிரிழந்துள்ளார். அப்போது முதலே அடிக்கடி தன்னை தனது தோழி அழைப்பதாக நந்தினி கூறிக் கொண்டே இருப்பாராம்.