உலகின் காஸ்ட்லி மருந்து ஒன்செம்னோஜன்! விலை ரூ.14 கோடி! ஏன் தெரியுமா?

உலகிலேயே மிக விலையுயர்ந்த மருந்தினை பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனமான நோவார்டிஸ் கண்டுபிடித்துள்ளது. எந்வதற்காத நோயை சரி செய்வதற்காக இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பதை பார்ப்போம்.


நம் வாழ்வாதாரத்திற்கு மருந்துகள் இன்றியமையாமல் தேவைப்படுகின்றன. நம் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் போது அதனை உடனே சரி செய்வதற்காக நாம் மருத்துவரையும் அவர் அளிக்கும் மருந்துகளையும் நாடி செல்கின்றோம்.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் குணபடுத்த முடியாத நோய்களை குணப்படுத்துவதற்காக தற்போது பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் மருந்துகள் கண்டுபிடித்துள்ளனர். உலகின் மிக அரிதான முதுகெலும்பு மரபணு மாற்று சிகிச்சைக்கான மருந்தினை  கண்டுபிடித்துள்ளனர்.

பிரபல நிறுவனமான நோவார்டிஸ் "ஒன்செம்னோஜன் சொல்ஜென்ஸ்மா" என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சிகிச்சைக்காக உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் விலையானது 2.1 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 14 கோடி ஆகும். இதனைப்பற்றி நோவார்டிஸ் நிறுவன சிஇஓ வாஸ் நரசிம்மன் கூறுகையில் " இந்த கண்டுபிடிப்பு எங்கள் அனுகுமுறைக்கு கிடைத்த வெற்றியென்றும், மேலும் பல்வேறு கண்டுபிடிப்புகளை நோக்கி தங்கள் நிறுவனம் பயனிப்பதாகவும் கூறினார்.