எனக்கு மனைவியாக அவர் தான் சரியான பெண்! பிரபல நடிகரின் மகளுக்கு வலை விரிக்கும் இளம் நடிகர்!

பிரபல பாலிவுட் நடிகரான கார்த்தி ஆர்யன் தன் சக ஜோடியும் தோழியுமான சாரா அலி கானை புகழ்ந்து பேசியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் காதல் ஜோடிகளுள் அனைவரையும் கவரும் ஜோடியாக கார்த்தி ஆர்யன் மற்றும் சாரா அலி கான் திகழ்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கிய படத்தில் நடித்து வந்தனர்.

இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படமானது "லவ் ஆஜ் கல்" என்னும் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 66 நாட்கள் நடந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. படத்தில் நடித்த ரன்தீப் ஹூடா என்ற நடிகர் இதனை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.

சாரா அலி கான் படப்பிடிப்பு முடிந்த தருணத்தில் சமூக வலைத்தளங்களில் கதாநாயகன் கார்த்திக் ஆர்யனையும், இயக்குநர் இம்தியாஸ் அலியையும் புகழும் வகையில் பதிவேற்றம் செய்துள்ளார். இதேபோன்று கார்த்தி ஆர்யன் தன் பங்கிற்கு சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அதாவது, "இந்தப் படம் இன்னும் நிறைய நாட்களுக்கு படமாக்க பட்டிருக்கவேண்டும் போல் தோன்றுகிறது. 66 நாட்கள் பத்தவில்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் எனது மனைவிக்கு சாரா அலிகானை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை என்றும் அவர் ஒரு இளவரசி என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார் கார்ததிக். இத்தனைக்கும் சாரா அலி கான் பிரபல நடிகர் சயப் அலிகானின் மகள் ஆவார். அதாவது சாராவை காதல் வலையில் வீழ்த்த கார்த்திக் முயல்வது போல் தெரிகிறது.