கூட்டணி தலைமையில் குழப்பமே இல்லை..! முதல்வர் எடப்பாடி உறுதியான முடிவு

தமிழகத்தில் வரும் 2021 தேர்தலில் பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்று வெளியான கருத்துக்கு அ.தி.மு.க.வினர் அனைவருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதுகுறித்து பேசிய முதல்வர், ‘கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். அப்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அறிவித்தார். ஆனால், இதன் பிறகும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து தஞ்சையில் கொரோனா ஆய்வுப் பணி செய்துவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி தலைமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘எந்த தேர்தலாக இருந்தாலும், அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும்’ என்று உறுதிபட தெரிவித்தார்.

இதன் மூலம் பா.ஜ.க.வின் ஓவர் பேச்சு முற்றிலும் முடங்கியிருக்கிறது. இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.க. தலைமையில் நடந்தபோதே, தமிழகத்தில் கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை ஏற்றது. அப்படியிருக்கும்போது, சட்டசபைத் தேர்தலுக்கு விட்டுத் தருமா என்ன..?