தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சடலத்தை கட்டி அணைத்து கணவர் படுத்துக்கொண்ட சம்பவமானது சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கில் தொங்கிய மனைவி..! சடலத்தை எடுத்துப் போட்டு அருகே படுத்து உறங்கிய கணவன்! குழந்தை இல்லாததால் ஏற்பட்ட விபரீதம்!
சென்னை புறநகர் பகுதியான மாதவரத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 ஆண்டுகள் முன்னால் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகளாகியும் இத்தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை.
இதனால் ரஞ்சித் மதுபோதைக்கு அடிமையானார். தினமும் குடித்துவிட்டு சரண்யாவுடன் கடுமையான தகராறுகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் வழக்கம் போல 13-ஆம் தேதியன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளன. மறுநாள் காலையில் ரஞ்சித் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மனமுடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீடு திரும்பியவுடன் ரஞ்சித் தன்னுடைய மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். சரண்யாவின் உடலை படுக்கையில் போட்டு, மதுபாட்டிலில் டீசலை கலந்து குடித்த ரஞ்சித் சற்றுநேரத்தில் அங்கேயே தூங்கியுள்ளார்.
14-ஆம் தேதியன்று நெடுநேரமாகியும் அவர்களுடைய வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்த அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அப்போது சரண்யா உயிரிழந்திருப்பது காவல்துறையினர் கண்டறிந்தனர். அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரஞ்சித்தை மயக்கத்திலிருந்து மீட்பதற்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது மாதவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.