நித்தியானந்தாவின் தனி நாடு எங்கு உள்ளது? IP அட்ரஸ் மூலம் கண்டுபிடித்த போலீஸ்! அடுத்து என்ன?

நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்து காவல்துறையினர் அறிந்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா உலக அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறார். இவர் ஒரு தனி நாட்டை உருவாக்கியுள்ளது ஆகவும், அதற்கு கைலாசம் என்று பெயரிட்டு இருப்பதாகவும் கூறி வைரலானார்.

அவர் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரிருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அதாவது நித்யானந்தா வெளியிட்ட வீடியோக்களின் ஐபி அட்ரஸ் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அமெரிக்கா நாட்டில் உள்ள பனாமா கால்வாய் மற்றும் மேற்கு வர்ஜீனியா தீவு ஆகிய இடங்களுக்கு மத்தியில் அவர் வசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அவருடன் வசித்து வந்த ஜனார்தன சாமிகள் என்பவருடைய மகள்கள் இந்த தகவல்களை காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் அவர் இருக்குமிடம் இன்னும் சரியாக புலப்படவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தகவல்களை ஒன்றாக வைத்துக்கொண்டு இந்திய அரசாங்கத்தினர் அமெரிக்காவிடம் நித்யானந்தாவை ஒப்படைக்குமாறு முறையிட்டு வருகின்றனர்.

இதனிடையே தற்போது நித்தியானந்தா மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், " நீங்கள் சிவத்தை உணர்ந்தால் கைலாசத்தை அடைவீர்கள். என்னுடைய அடுத்த இலக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் தான். இது இலங்கையில் அமைந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகு இந்தியாவின் பொருளாதாரம் செழிப்படையும்" என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் ராமர் பற்றியும் ராவணன் பற்றியும் அவர் நிறைய கதை கூறியுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.