ஒன் பாத்ரூம் கூட போகவிடமாட்டாங்க! பிடதி ஆசிரம ரகசியத்தை உடைக்கும் நித்யானந்தாவின் பெண் சீடர்!

நித்யானந்தாவின் ஆசிரமங்கள் சின்னஞ்சிறு சிறுமிகள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாக கனடா நாட்டு சிஷ்யை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கனடா நாட்டில் பிறந்தவர் சாரா லேண்டரி. இவர் அந்நாட்டிலிருந்து இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்திற்கு வந்தார். பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ருத்ரகன்னியாக மாறினார். மேலும் தன் பெயரை "ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா" என்று மாற்றிக்கொண்டார்.

2017-ஆம் ஆண்டில் நித்யானந்தா உண்மையிலேயே சக்தி மிகுந்தவர் என்று நினைத்து அவருடைய மடத்தில் சேர்ந்தேன். அவர் என்னை கேரளாவிலுள்ள பிடதிக்கு இடம் மாற்றினார். அங்குள்ள சின்னஞ்சிறு சிறுமிகளுக்கு சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு எனக்கு கட்டளையிட்டார்.

நானும் அதனை ஏற்றுக்கொண்டு கேரளாவுக்கு சென்றேன். அப்போதுதான் எனக்கு நித்யானந்தாவின் உண்மையான சுயரூபம் தெரியவந்தது. அங்கு பயிலும் சின்னஞ்சிறு சிறுமிகளுக்கு கடுமையான சிரமங்கள் ஏற்படுவதை கண்டறிந்தேன். அவர்களை இயற்கை உபாதைகள் கூட கழிக்க விடாமல் பீடத்தினர் கட்டாயப்படுத்தினர்.

பீடத்தினர் கூறும்போது தான் அவர்கள் இயற்கை உபாதைகளுக்கு செல்ல வேண்டும் என்ற கொடுமையான சட்டங்கள் இருந்தன. இது குறித்து ஏராளமான முறை தான் ரஞ்சிதாவிடம் கூறினேன். ஆனால் அவர் அதற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 13 வயது சிறுமியை மூன்றாவது கண்ணை திறக்க வைப்பதாக கூறி கொடுமைப்படுத்திய சம்பவங்கள் இன்னும் என் கண்களை விட்டு மறையவில்லை.

பின்னர் ஒரு வழியாக கனடா நாட்டிற்கு சென்று இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக சாரா வீடியோவில் கூறியுள்ளார். 2 ஆண்டுகளுக்கு பிறகு சாரா குற்றம் சாட்டுவதால் அதனை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. மேலும் மதத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் என்றும் நித்தியானந்தாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் என்றும் மடத்தினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவமானது நித்யானந்தாவுக்கு மேலும் ஒரு நெருக்கடியை கொடுத்துள்ளது.