பிஜேபி அரசின் பொருளாதாரக் கொள்கையை விளாசும் நிர்மலா சீதாராமனின் கணவர்! அவருக்கு நிர்மலாவின் பதில் என்ன தெரியுமா?

பிஜேபி அரசுக்கு பொருளாதார கொள்கையே இல்லையாம்.சொல்வது நிர்மலா சீதாராமனின் கணவர்.


பிஜேபி ஆட்சியில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கப் போவதாக உள்ளூர் பொருளாதார நிபுணர்கள் முதல் முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன்வரை பலர் எச்சரித்தனர்.சமீபத்தில் உலகவங்கியும் எச்சரித்தது.பணமதிப்பிழப்பு திட்டம் லாஜிக்கே இல்லாதது என்று சொன்ன அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

இப்போதும்,எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்ற ஒரே பதிலை சொல்லிக்கொண்டே இருக்கிறது பிஜேபி தலைமை. கடைசியாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கனவர் பரகல பிரபாகரும் களத்தில் இறங்கி பிஜேபி அரசிடம் தெளிவான பொருளாதாரக் கொள்கைகளோ செயல் திட்டங்களோ இல்லை என்று சாடி இருக்கிறார்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபாகர் சாதாரண ஆள் அல்ல,பொருளாதார நிபுணர்.2014 முதல் 2018 வரை ஆந்திர மாநிலத்தின் தகவல்தொடர்பு துறை ஆலோசகர்.அதற்கு முன்பு சிரஞ்சீவியின் பிரஜா ராஜ் பார்ட்டியின் செயலாளர்களில் ஒருவராக இருந்த அரசியல் அனுபவமும் உடையவர்.

நேருவின் கொள்கைகளை எதிர்ப்பதில் தெளிவாக இருந்தாலும்,முதலாளித்துவம்,தடையற்ற சந்தைப் பொருளாதாரம் என்கிற அதன் கொள்கைகளை சோதித்துப் பார்க்கவே இல்லை.அவர்களிடம் தெளிவான பொருளாதாரக் கொள்கை இல்லாததால்தான் நேரு எதிர்ப்பு,பாதுகாப்பு அச்சுறுத்தல், தேசியவாதம் போன்றவற்றை மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்தனர்.பி.வி நரசிம்மராவ்,மன்மோகன் சிங் ஆகியோறின் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் நிகரற்றவை.

அந்தக் கொள்கைகளை முழுமையாக கடை பிடித்தால் மட்டுமே இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவில் இருந்து மீள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.கணவருக்கு பதில் சொல்லும் விதமாக எங்களிடம் திட்டங்கள் இருக்கின்றன,என்று மட்டுமே நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். அவருக்கு உதவிக்கு வந்திருக்கும் இதை பொருளாதார சரிவு பற்றிய விவாதமாக எடுத்துக் கொள்ளாமல்,

வெறும் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் குடும்பச் சண்டை போலவே பாவித்து பேசி இருக்கிறார். கணவனும் மனைவியும் எப்போதும்,எல்லாவற்றிலும் ஒரே கருத்தைக் கொண்டிருக்க முடியுமா என்று கேட்கும் அமித் ஷா,பரகல பிரபாகர் ஒரு சுதந்திர சிந்தனையாளர்.நாட்டில் உள்ள எல்லோருக்கும் அவரவர் கருத்துக்களை சொல்லச் சுதந்திரம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

நாட்டில் நடக்கும் எல்லாவற்றையும் கலாய்கும் சிட்டிசன்கள்,தமிழிசை செளந்தரராஜனின் மகன் விமான நிலையத்தில் வைத்து பிஜேபிக்கு எதிராக முழக்கமிட்டதைச் சுட்டிக்காட்டி,அதைத்தொடர்ந்து அவர் கவர்னர் ஆனது போல பரகல பிரபாகர் தன் மனைவியை ஜனாதி பதியாக்க முயல்கிறாரா என்று கேட்பதையும் சுலபமாக சிரித்து ஒதுக்கிவிட முடியாது.