சாப்பாடு வேண்டாம்..! குளிக்க முடியாது..! நிர்பயா குற்றவாளிகளின் கடைசி நிமிடங்கள்..! திகாரில் இருந்து வெளியான தகவல்கள்!

தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக வழங்கப்பட்ட கடைசி உணவை சாப்பிட நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரும் மறுத்ததுடன் குளிக்கவும் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தூக்கு தண்டனை நிறைவேற்றப்டுவதை முன்னிட்டு குற்றவாளிகள் அக்சய் தாக்கூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களாக தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர்களுடைய அறைக்கு சென்ற போது நான்கு பேருமே உறங்காமல் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து நான்கு பேரையும் குளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு நான்கு பேரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாக நான்கு பேருக்கும் காலை உணவு கொடுக்கப்பட்டது. ஆனால் அது தங்களுக்கு தேவையில்லை என்று நான்கு பேரும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேருக்கும் சிறை மருத்தவர் உடல் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் நான்கு பேரும் நலமுடன் இருப்பதாக அவர் சான்றழித்தார். இதனை அடுத்து அவர்களை தூக்கு மேடைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது முகேஷ் மட்டும் தன்னை மன்னித்துவிடுமாறும், தூக்கில் ஏற்ற வேண்டாம் என்றும் கதறியுள்ளான்.

மற்ற நான்கு பேரும் அமைதியாக தூக்குமேடையை நோக்கி நடந்துள்ளனர். இதனை அடுத்து சிறை சூப்பிரண்ட், துணை சூப்பிரண்ட், மாவட்ட நீதிபதி, சிறை அதிகாரி ஒருவர் மற்றும் தூக்கு தண்டனைறை நிறைவேற்றிய பவன் ஜலாட் ஆகியோர் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். 5.30 மணிக்கு மாவட்ட நீதிபதி அனுமதி கொடுத்தததும் நான்கு பேரும் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.