நான்கு பேரும் தூக்கில் ஏற்றப்பட்ட அடுத்த நொடி..! நிர்பயா தாயார் செய்த செயல்..! கூறிய வார்த்தை..! என்ன தெரியுமா?

குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கில் ஏற்றப்பட்ட தகவல் கிடைத்த உடன் நிர்பயாவின் தாயார் உணர்ச்சிவசப்பட்டு கூறிய வார்த்தைகள் மற்றும் செய்த செயல் வெளியாகியுள்ளது.


டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பல்வேறு கட்ட தடைகளை மீறி நான்கு பேரும் டெல்லி திகார் சிறையில் இன்று தூக்கில் ஏற்றப்பட்டனர்.

அதிகாலை 5.30 மணிக்கு 4 பேரும் தூக்கில் ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை திகார் சிறை நிர்வாகம் உறுதி செய்தது. இதனை அடுத்து இந்த தகவல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் பிரேக்கிங் நியுசாக ஒளிபரப்பானது. இதனை பார்த்த உடன் நிர்பயாவின் தயார் உடனடியாக சென்று தனது மகளின் புகைப்படத்தை எடுத்து கட்டி அணைத்துக் கொண்டார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த நிர்பயாவின் தயார், தற்போது தன் மகளுக்கு மட்டுமே நீதி கிடைக்கவில்லை, இந்தியாவிற்கே நீதி கிடைத்துள்ளது என்று உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார். குற்றவாளிகள் நான்கு பேரையும் தூக்கில் ஏற்ற கடந்த சில மாதங்களாக இரவு பகலாக சட்டப்போராட்டம் நடத்தி வந்தர் நிர்பயா தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.