தூக்கில் தொங்கவிடப்பட்ட பிறகு விடாமல் துடித்த நிர்பயா குற்றவாளிகளின் இதயம்..! எவ்வளவு நேரம் தெரியுமா?

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட 4 குற்றவாளிகளின் பிரேதபரிசோதனை சுமார் 5 மணி நேரம் முடிந்த பிறகு முக்கிய தகவல்களை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.


கடந்த 7 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நிர்பயா என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு நான்கு பேரின் உடல்களும் மருத்துவர் பி என் மிஸ்ரா தலைமையிலான மருத்துவர்கள் குழு சுமார் 5 மணி நேரம் பிரேத பரிசோதனை செய்தது. இந்தப் பிரேத பரிசோதனையின் முடிவில் பல முக்கிய தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பேசிய மருத்துவர் மிஸ்ரா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவருக்கும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நபருக்கும் பிரேத பரிசோதனையில் நிறைய வேறுபாடுகள் இருக்கும் என கூறினார். தானாக தற்கொலை செய்து கொள்ளும் போது உடையும் கழுத்து எலும்புக்கும் , அனுபவம் வாய்ந்த ஹேங்மேன் மூலம் நிறைவேற்றப்படும் போது உடையும் கழுத்து எலும்புக்கும் வித்தியாசம் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் போது கழுத்து எலும்பு உடைந்த பிறகு அவர் மயக்க நிலைக்குச் சென்று விடுவார். பின்னர் ஒரு சில நிமிடங்களில் உயிர் பிரிந்து விடும். பிரேத பரிசோதனையில் சிறை விதிமுறைகளின்படி முறையாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா என ஆய்வு செய்தோம். இதயத் துடிப்புகளை வைத்து இதை நாம் கணக்கிடலாம். சிறை விதிமுறைகளை முறையாக பின்பற்றி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், தூக்கிலிட்ட பின் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை இதயம் துடித்துக் கொண்டே இருக்கும். 

அவ்வாறு இதயம் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை துடித்துக் கொண்டிருந்தால் தான் சிறை விதிமுறைகளை முறையாக பின்பற்றி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்று அர்த்தம் எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.